தமிழ்நாடு
வாக்கு இயந்திரம் பழுது... வாக்குப்பதிவே துவங்காத வாக்குச்சாவடிகள்!
வாக்கு இயந்திரம் பழுது... வாக்குப்பதிவே துவங்காத வாக்குச்சாவடிகள்!
தமிழகத்தில் சில இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் இன்னும் வாக்குப்பதிவு தொடங்கவில்லை.
தமிழகத்தின் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையில் தமிழகத்தில் சில இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது காரணமாக வாக்குப்பதிவு தொடங்கவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது
சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டசபை தொகுதியில் பல இடங்களில் இன்னும் வாக்குப்பதிவு தொடங்கவில்லை. அதேபோல் அவிநாசி தொகுதியில் வாக்குச்சாவடி எண் 218-ல் (ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அவிநாசி) வாக்கு இயந்திரம் பழுதால் இன்னும் வாக்குப்பதிவு தொடங்கவில்லை. மயிலாடுதுறை தொகுதி திருவிழந்தூரில் உள்ள வாக்குச்சாவடியில் இயந்திரக்கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்கவில்லை.