\
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
Published on

தமிழகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 86 லட்சம் வாக்காளர்கள் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அதில், 2 கோடியே 90 லட்சம் ஆண் வாக்காளர்களும், 2 கோடியே 96 லட்‌சம் பெண் வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர். அதேபோல், 5,197 திருநங்கைகளும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றனர்.

போலி வாக்காளர், உயிரிழந்தவர்‌ என வாக்காளர் இறுதிப் பட்டியலிலிருந்து 5 லட்சத்து 87,000 பேர் நீக்க‌ம் செய்யப்பட்டுள்ளனர். ‌தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் மொத்தம் 28 லட்சத்து 31,718 பேரும், கடலூர் மாவட்டத்தில் 20 லட்சத்து 1‌8,000 வாக்காளர்களும் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com