வாக்காளர் பட்டியலில் திருத்தம்: இன்றும் நாளையும் சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் திருத்தம்: இன்றும் நாளையும் சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் திருத்தம்: இன்றும் நாளையும் சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை மற்றும் திருத்தம் செய்ய இன்றும் நாளையும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.


கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் சரியான நேரத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா தெரிவித்த நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் நீயா நானா என கடும் போட்டியுடன் கூடிய தேர்தலாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.


கருணாநிதி, ஜெயலலிதா என்ற மிகப் பெரிய ஆளுமைகள் இல்லாமல் திமுகவும் அதிமுகவும் முதன் முதலாக சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த தேர்தல் எப்படி இருக்கும்? யார் யாருடன் கூட்டணி அமைப்பார்கள்? வெற்றிபெறப் போவது யார்? ஆட்சிக் கட்டிலில் அமரப்போவது யார்? என பல எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன.


தேர்தலை சந்திக்க கட்சிகள் தயாராகி வரும் நிலையில் தேர்தலை நடத்தும் தேர்தல் கமிஷனும் தன்னுடைய ஆயத்தப் பணிகளை தொடங்கி செய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்தம் மேற்கொள்ள இன்று சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.


கடந்த வாரம் தலைமைத் தேர்தல் அதிகாரி, வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டிருந்தார். அந்த வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்துகொள்ள தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இன்றும் (21.11.2020), நாளையும் (22.11.2020) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.


டிசம்பர் 12, 13ஆம் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. டிசம்பர் 15ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com