தமிழ்நாடு
மக்கள் விருப்பப்படி வாக்களிப்பேன்: எம்.எல்.ஏ நட்ராஜ்
மக்கள் விருப்பப்படி வாக்களிப்பேன்: எம்.எல்.ஏ நட்ராஜ்
சட்டப்பேரவையில் நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் மனசாட்சிப்படி வாக்களிக்க உள்ளதாக மைலாப்பூர் எம்.எல்.ஏ நட்ராஜ் தெரிவித்துள்ளார்.
மக்கள் விருப்பப்படியே நாளை வாக்களிக்கப் போவதாகவும், இப்போதைக்கு எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை எனவும் நட்ராஜ் கூறியிருக்கிறார். முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எம்.எல்.ஏ நட்ராஜ் வாக்களிப்போவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதனை நட்ராஜ் மறுத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்த நட்ராஜ் நடுநிலை வகிக்கப்போவதாக கூறியிருந்தார். இந்நிலையில் நட்ராஜின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வரும் நிலையிலும் அவர் யாருக்கு ஆதரவு அளிக்கப்போகிறார் என்பதை இதுவரை தெளிவுபடுத்தவில்லை.