வறுமையின் பிடியிலேயே வளரும் குழந்தைகள்.. பட்டப்படிப்பு வரை கல்விச்செலவை ஏற்ற தன்னார்வலர்கள்!

பொங்கல் பண்டிகைக்கு பெரும்பாலான மக்கள் தயாராகிவிட்ட நிலையில், வறுமையின் பிடியில் இருக்கும் மீனவ கிராம குழந்தைகளின் பொங்கல் பண்டிகை எப்படி இருக்கும் பார்க்கலாம்..

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாப்படுகிறது. ஆனால், எல்லாருக்கும் அந்த வாய்ப்பு அமைந்து விடுவதில்லை. அன்றாடமே போராட்டமாக இருக்கும் மீனவ மக்களின் பொங்கல் பண்டிகை எப்படி இருக்கும்?

சென்னை திருவொற்றியூர் எர்ணாவூர் மீனவக் கிராமத்தில் உள்ள குழந்தைகளின் பொங்கல் பண்டிகையைப் பார்க்கலாம்…

வறுமையின் பிடியில் இருக்கும் குழந்தைகள்..

எர்ணாவூர்.. வடசென்னையின் திருவொற்றியூரில் அமைந்திருக்கும் மீனவக் கிராமம். வறுமையின்பிடியிலேயே இப்பகுதி குழந்தைகள் வளர்கிறார்கள். கடலுக்கு போன அப்பா எப்போ திரும்பி வருவார் என்று தெரியாது. அம்மாவும் வேலைக்குப் போனால்தான் சாப்பிட முடியும். குடும்ப நெருக்கடி காரணமாக நிறைய குழந்தைகள் பள்ளிப்படிப்படிப்பை பாதியில் நிறுத்தும் சூழலில் உள்ளனர். அந்தக் குழந்தைகளுக்கான பொங்கலை ஏற்பாடு செய்திருக்கிறார் அருள்தாசன்.

பொங்கல் பண்டிகைக்கு மட்டுமல்ல, இந்த மீனவக் குழந்தைகளின் கல்விக்கு தொடர்ச்சியாக உதவி வருகிறார்கள் அருள்தாசன் உள்ளிட்ட தன்னார்வலர்கள்.

வறுமையின் பிடியில் இருக்கும் குழந்தைகளின் மேம்பாட்டுக்கு தன்னார்வலர்களின் உதவி முக்கியமானதாக இருப்பதை அருள்தாசனின் செயல்பாடு நமக்கு உணர்த்துகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com