வ.உ.சி பிறந்தநாள்: 72 கிலோ மீட்டர் தூரம் தொடர் ஓட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்

வ.உ.சி பிறந்தநாள்: 72 கிலோ மீட்டர் தூரம் தொடர் ஓட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்
வ.உ.சி பிறந்தநாள்: 72 கிலோ மீட்டர் தூரம் தொடர் ஓட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்

கோவில்பட்டி அருகே சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி-யின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர் ஒருவர் 72 கிலோ மீட்டர் தூரம் தொடர் ஓட்டத்தை மேற்கொண்டார்.

சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. வ.உ.சி-யின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செய்யும் வகையிலும், அவரது சுதேசி கொள்கைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரத்தில் இருந்து தூத்துக்குடியை சேர்ந்த சூர்யா சங்கர் என்ற இளைஞர் தொடர் ஓட்டம் மேற்கொண்டார்.

எட்டயபுரம் மகாகவி பாரதியார் மணிமண்டபம் முன்பு தொடங்கிய இந்த தொடர் ஓட்டத்தை எட்டயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகன், தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி கழக செயலாளர் குருசித்ர சண்முகபாரதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். பாரதியார் மணி மண்டபம் முன்பு தொடர் ஓட்டத்தை தொடங்கிய சூர்யா சங்கர் எப்போது வென்றான், குறுக்கச்சாலை, ஒட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சி.நினைவு இல்லம், தூத்துக்குடி புதிய துறைமுகம், தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி சிலை வழியாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு அரங்கில் ஓட்டத்தினை நிறைவு செய்கிறார்.

சுமார் 72 கிலோ மீட்டர் தூரம் தொடர் ஓட்டம் மேற்கொண்டுள்ள சூர்யா சங்கர் இதன்மூலம் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி-க்கு புகழஞ்சலி செலுத்துகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com