\
ஹெல்மெட்டிற்குள் வைத்து பேசிய செல்போன் வெடிப்பு : இளைஞர் படுகாயம்

ஹெல்மெட்டிற்குள் வைத்து பேசிய செல்போன் வெடிப்பு : இளைஞர் படுகாயம்

ஹெல்மெட்டிற்குள் வைத்து பேசிய செல்போன் வெடிப்பு : இளைஞர் படுகாயம்
Published on

கிருஷ்ணகிரியில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட்டிற்கு வைத்து பேசிய செல்போன் வெடித்ததால் இளைஞர் படுகாயம் அடைந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி அருகே புளியரிசி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (40). இவர் சொந்த வேலை காரணமாக ஓசூருக்கு இருச்சகர வாகனத்தில் சென்றுள்ளார். கிருஷ்ணகிரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே சென்ற போது அவருக்கு போன் வந்துள்ளது. இதையடுத்து செல்போனை ஹெல்மெட்டிற்குள் வைத்துக்கொண்டு பேசியவாறு அவர் சென்றுள்ளார். அப்போது திடீரென்று செல்போன் வெடித்து தலை, காது, கை பகுதியில் படுயங்களுடன் அவர் கீழே விழுந்தார்.

உடனே அங்கு கூடிய மக்கள் காவல்துறையினர் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சூளகிரி போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர் விவோ ஸ்மார்ட்போனை ஹெல்மெட்டிற்குள் வைத்து பேசிக்கொண்டு சென்றார் என்பது தெரியவந்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com