இரண்டு மாடல்களிலும் விளம்பரங்கள் தான் வேலை செய்கின்றன!- வாசகர்கள் கமெண்ட்ஸ் #LikeDislike

இரண்டு மாடல்களிலும் விளம்பரங்கள் தான் வேலை செய்கின்றன!- வாசகர்கள் கமெண்ட்ஸ் #LikeDislike
இரண்டு மாடல்களிலும் விளம்பரங்கள் தான் வேலை செய்கின்றன!- வாசகர்கள் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மார்ச் 31-ம் தேதி தேதிக்கான தலைப்பாக " மோடி மாடல் Vs திராவிட மாடல்... எது சிறந்த மாடல்...?" எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.

மோடி, திராவிட மாடல் ஆகிய இரண்டும் தமிழ் மக்களுக்கானதல்ல; மோடி மாடல் தனியார் முதலாளிகளுக்கானது. திராவிட மாடல் கோபாலபுரம் மக்களுக்கானது. இருவரும் ஒரு கூட்டுக் களவாணிகள் தான். எதிர்ப்பதைபோல வெளிப்படையாக எதிர்ப்பார்கள். உள்ளுக்குள் கள்ளத்தனமாக உறவாடுவார்கள். போத் ஆர் வொர்ஸ்ட் மாடல்.

அனைத்து மக்களை ஒருசேர சகோதரத்துவத்துடன் ஒருநிலைப்படுத்தி வளர்ச்சியை மட்டுமே பிரதானமாக சொல்லுவதே சிறந்த மாடல்!!
அந்த வகையில் தமிழகம் கடந்து வந்த 50 ஆண்டுகால திராவிட மாடல் சிறப்பு!!

பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து, பொய்யிலே காலத்தை ஓட்டும் திராவிட மாடலை விட மோடி மாடலே சிறந்தது

இரண்டு மாடல்களிலும் வாழ்ந்தாகிவிட்டோம் , இரண்டு மாடல்களிலும் விளம்பரங்கள் தான் வேலை செய்கின்றன.
உணர்வுப்பூர்வமான அரசியல் மாடல்கள் வந்தால் நன்றாக இருக்கும். அரசு துறைகள் பொய்யான குறிப்புகளை வழங்கி வருகிறது! பாமரனுக்கும் உழைக்கும் அரசு தேவை!

ரொம்ப சாதாரண கேள்வி கல்வியறிவு எங்கு அதிகமாக உள்ளதோ அது சிறந்த மாடல் குஜராத்?தமிழ்நாடா?

Mygov.in போதும் மோடி மாடல் தான் சிறந்தது என சொல்ல.
மக்கள் கருத்தை கேட்டு முடிவு எடுக்கும் மோடி மாடல் தான் இருப்பதில் தலைசிறந்த மாடல்.
நாலு சுவற்றுக்குள் அதிகாரிகள் , அரசியல்கட்சிகள் சொல்கிறபடி ஆடாமல் சமூகம் சார்ந்த முக்கிய முடிவுகளை மக்கள் கருத்தை கேட்டு முடிவு எடுப்பது மோடி மாடல் தான் இந்தியாவிற்கு தேவை.

சட்டமோ , கொள்கையோ அமல்படுத்தும் நடைமுறை சிக்கல்கள் மோடி மாடலில் அதிகம் இருப்பது இல்லை. அதற்கு காரணம் அடிப்படையில் மக்கள் கருத்தின் அடிப்படையில் செயல்படுவது தான்.

ஊழல் இல்லை. மோடி மாடலில் தரம் இருக்கிறது. மக்களுக்கான சட்டங்கள் , கொள்கைகள் எல்லாம் முதலில் மக்களின் கருத்தை பொது தளத்தில் கேட்டு அதன் அடிப்படையில் செயல்பட வேண்டும். மோடி மாடலில் நாட்டின் வருவாய் உயர்ந்து உள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com