\
“விவேகானந்தர் பேசியதுதான் முதல் பஞ்ச் டயலாக்” - விவேக்

“விவேகானந்தர் பேசியதுதான் முதல் பஞ்ச் டயலாக்” - விவேக்

“விவேகானந்தர் பேசியதுதான் முதல் பஞ்ச் டயலாக்” - விவேக்
Published on

சுவாமி விவேகானந்தர் ஒரு சூப்பர் ஸ்டார் என நடிகர்‌ விவேக் தெரிவித்துள்ளார். 

சுவாமி விவேகானந்தரின் 156 வது பிறந்த நாள் விழா சென்னையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விவேக் கலந்து கொண்டு பேசினார். அப்போது, விவேகானந்தர் ஒரு சூப்பர் ஸ்டார் எனவும் சிகாகோவில் சகோதர்களே, சகோதரிகளே என்று விவேகானந்தர் பேசியதுதான் உலகின் முதல் பஞ்ச் டயலாக் எனவும் விவேக் தெரிவித்தார்.

தூங்கி கிடந்த இந்தியாவை தட்டி எழுப்பியவர் விவேகானந்தர் எனவும் விவேக் புகழாரம் சூட்டினார். மேலும் இன்றைய மாணவர்கள் தங்கள் வயதுக்கு மீறியவற்றை செல்போன் மூலம் தெரிந்து கொள்கிறார்கள் என்றும், பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதற்கு செல்போனிலிருக்கும் கேமராவும், இணையமுமே காரணம் என்றும் தெரிவித்தார். இண்டர்நெட்டில் இருந்து நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் செல்போனில் இருந்து கேமராவும் இணையமும் நீக்கப்பட்டாலே சமூதாயத்தில் பாதி குற்றங்கள் குறையும் எனவும் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com