சிறுத்தை புலியை அருகில் கண்ட சுற்றுலா பயணிகள் குஷி

சிறுத்தை புலியை அருகில் கண்ட சுற்றுலா பயணிகள் குஷி

சிறுத்தை புலியை அருகில் கண்ட சுற்றுலா பயணிகள் குஷி
Published on

தேக்கடியில் படகு சவாரியின் போது  சுற்றுலாபயணிகள் சிறுத்தை புலியை அருகில் கண்டு குஷியடைந்தனர்.

கேரள மாநிலம் தேக்கடி ஏரியில் சுற்றுலாப்பயணிகள் படகு சவாரி செய்வது வழக்கம். இந்த சவாரியில் மான், காட்டு மாடு, யானைகள் போன்ற விலங்குகளை கரைப்பகுதியில் அவ்வப்போது சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பார்கள். இந்நிலையில் சுற்றுலாப்பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்துக் கொண்டிருந்த போது, ஏரியின் வனப்பகுதியை ஓட்டியுள்ள பகுதியில் சிறுத்தை புலி ஒன்று ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தது. இதனை கண்ட சுற்றுலாவாசிகள் உற்சாகம் அடைந்தனர். மேலும் ஆர்வமுடன் சிறுத்தை புலியை புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர். தேக்கடியில் உள்ள அடர்ந்த காட்டு பகுதியில் புலிகளை அருகில் காண்பது அரிதானது என வனத்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com