\
விஷாலுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடி வாரண்ட்

விஷாலுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடி வாரண்ட்

விஷாலுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடி வாரண்ட்
Published on

வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷாலுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்தது. 

விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பு நிறவனத்தின் பணியாளர்களிடம் பிடித்த செய்த டிடிஎஸ் (TDS) தொகையை செலுத்தாததால் விஷால் மீது வருமான வரித்துறை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி விஷாலை நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில் இன்று வழக்கில் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை விஷாலுக்கு வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com