\
அனுமதியின்றி செயல்பட்ட பார்களை அடித்து நொறுக்கிய அதிகாரிகள்

அனுமதியின்றி செயல்பட்ட பார்களை அடித்து நொறுக்கிய அதிகாரிகள்

அனுமதியின்றி செயல்பட்ட பார்களை அடித்து நொறுக்கிய அதிகாரிகள்
Published on

விருத்தா‌சலம் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளின் பார்களை அதிகாரிகள் அடித்து நொறுக்கினர். 

கடலூர் மா‌வட்டம் விருத்தாசலத்தில்,‌ 6 டாஸ்மாக் கடைகளிலும் அனுமதியின்றி பார்கள் இயங்குதாக மக்கள் புகார் அளித்தனர். இதுகுறித்து டாஸ்மாக் மண்டல மேலாலர் வேலுசாமி தலைமையில் தனிப்படையினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பார்களிலிருந்த‌ சிமெண்ட் இருக்கை, மேசை உள்ளிட்டவற்றை அதிகாரிகள் உடைத்தனர். அனுமதியின்றி பார் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com