\
பிரியாணிக் கடை தாக்குதல் : 7 பேர் கைது

பிரியாணிக் கடை தாக்குதல் : 7 பேர் கைது

பிரியாணிக் கடை தாக்குதல் : 7 பேர் கைது
Published on

விருகம்பாக்கத்தில் பிரியாணிக் கடை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் கல்லூரி மாணவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஆர்.ஆர். அன்பு பிரியாணிக் கடைக்கு வந்த சிலர் உணவு உண்ண வந்தனர். அப்போது பிரியாணி கேட்டு அவர்கள் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேரமாகி விட்டதால் பிரியாணி இல்லையென கடைக்காரர்கள் கூறவே, வந்திருந்தவர்கள் கடை ஊழியர்களை சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து கடையின் மேலாளர் அருண் ஜஸ்டின் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். 

விசாரணையில் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த யுவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் பிரியாணிக் கடை ஊழியர்களை தாக்கியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் யுவராஜின் நண்பர்கள் ராம், கார்த்திக், கிஷோர், ருத்ரகுமார், கார்த்திக் மற்றும் கல்லூரி மாணவர் சுரேஷ் ஆகியோரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள யுவராஜ், திவாகர் மற்றும் சதீஷ் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com