மெருகேற்றும் கல்pt desk
தமிழ்நாடு
விருதுநகர்: வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ள மெருகேற்றும் கல்..!
விருதுநகர் அருகே வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளம் 3-ம் கட்ட அகழாய்வில் அலங்காரப் பொருட்களை மெருகேற்றி பாலிஷ் போடவும், வீடுகளில் தரைத் தளத்தை சமப்படுத்த பயன்படும் மெருகேற்றும் கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்: A.மணிகண்டன்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3-ம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 18 குழிகளில் 3,300-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்நிலையில் தற்போது இரண்டு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்
இந்த அகழாய்வு பணியின் போது அலங்காரப் பொருட்களை மெருகேற்றி பாலிஷ் போடவும், வீட்டில் தரைத் தளத்தை சமப்படுத்த பயன்படும் மெருகேற்றும் கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் கூறியபோது, இந்த அகழாய்வில் அலங்காரப் பொருட்களை மெருகேற்றி பாலிஷ் போடும் கல்லை பயன்படுத்தியுள்ளது தெரிய வருகிறது என தெரிவித்தார்.