"அஞ்சன கோல்" pt desk
தமிழ்நாடு
விருதுநகர் | வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டறியப்பட்ட "அஞ்சன கோல்"
விருதுநகர் அருகே வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3-ம் கட்ட அகழாய்வில் செம்பினால் செய்யப்பட்ட "அஞ்சன கோல்" கண்டெடுக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்: A.மணிகண்டன்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜய கரிசல் குளத்தில் நடைபெற்று வரும் 3-ம் கட்ட அகழாய்வில், 22 குழிகள் தோண்டப்பட்டு அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்வில் இதுவரை சங்கு வளையல்கள், கண்ணாடி மணிகள், சுடுமண் குவளைகள், சூது பவள மணி, உள்ளிட்ட 4,401-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்
இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் அகழாய்வில் புதிதாக சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட பதக்கம் மற்றும் இரும்பு - முதல் முறையாக ஈயம் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முன்தினம் புதிதாக தங்கத்தால் செய்யப்பட்ட குண்டுமணி கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து நேற்று நடந்த அகழாய்வில் செம்பினால் செய்யப்பட்ட "அஞ்சன கோல்" கண்டெடுக்கப்பட்டுள்ளது.