விருதுநகர்: விவசாய தோப்பில் பதுக்கி வைத்திருந்த 2 யானை தந்தங்கள் பறிமுதல்

விருதுநகர்: விவசாய தோப்பில் பதுக்கி வைத்திருந்த 2 யானை தந்தங்கள் பறிமுதல்

விருதுநகர்: விவசாய தோப்பில் பதுக்கி வைத்திருந்த 2 யானை தந்தங்கள் பறிமுதல்
Published on

ராஜபாளையத்தில் உள்ள விவசாய தோப்புக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு யானை தந்தங்களை பறிமுதல் செய்துள்ள வனத்துறையினர், ஒருவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில், புல்லுப்பத்தி பகுதியில் உள்ள விவசாய தோப்பில் யானை தந்தங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வனத் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனை அடுத்து அப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த விவசாய தோப்பில் இரண்டு யானை தந்தங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு யானை தந்தங்களையும் பறிமுதல் செய்த வனத்துறையினர், தோப்பில் வசித்து வந்த முத்துராஜ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com