விருதுநகர்: ஓடும் அரசுப் பேருந்தில் இருந்து உடைந்து விழுந்த படிக்கட்டு – அச்சத்தில் பயணிகள்!

ராஜபாளையத்தில் கட்டணமின்றி மகளிர் பயணம் செய்யும் நகரப் பேருந்து சாலையில் சென்று கொண்டிருந்த போது, பின்புற படிக்கட்டு உடைந்து சாலையோரம் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Stair case fall down
Stair case fall downpt desk

செய்தியாளர்: கருப்பஞானியார்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1 மணி அளவில், முடங்கியாறு சாலையில் உள்ள தனியார் கல்லூரி வரை இயக்கப்படும் நகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. மகளிர் கட்டணமின்றி பயணம் செய்யும் இந்த பேருந்து, வட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்த போது, பின்புற படிக்கட்டு திடீரென உடைந்து சாலையோரம் விழுந்துள்ளது.

Stair case
Stair casept desk
Stair case fall down
பாஜக எம்பியின் சர்ச்சை பேச்சு.. வேட்பாளரை மாற்றக்கோரி ராஜபுத்திர மக்கள் பேரணி.. ஸ்தம்பித்த குஜராத்!

அந்த சமயம் படிகட்டு மற்றும் பின் பகுதியில் பயணிகள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை. இதையறிந்த ஓட்டுனர், பட்டிக்கட்டை அந்த இடத்திலேயே விட்டு விட்டு பயணிகளை அழைத்து சென்று விட்டார். பயணிகளை இறக்கி விட்டு திரும்ப வரும் போது, சாலையோரம் கிடந்த படிக்கட்டை எடுத்துக் கொண்டு பணிமனைக்குச் சென்றனர்.

இந்த சம்பவம் அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற பாதுகாப்பு இல்லாத பேருந்துகளால் பயணிகளின் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பயணிகள் அச்சம் தெரிவித்தனர்.

Govt Bus
Govt Buspt desk
Stair case fall down
“அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் GST கட்ட வேண்டுமா?”-பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

இது குறித்து அரசுப் போக்குவரத்து கழக மேலாளரிடம் கேட்ட போது, படிக்கட்டை பேருந்துடன் இணைத்துள்ள பகுதியில் வெல்டிங் உடைந்ததால் படிக்கட்டு உடைந்து விழுந்துள்ளது. தற்போது மீண்டும் பேருந்துடன், படிக்கட்டை இணைக்கும் பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com