\
விமானத்தில் பறந்த அரசுப் பள்ளி மாணவர்கள்... நெகிழ வைத்த ஆசிரியருக்கு குவியும் பாராட்டுகள்.

விமானத்தில் பறந்த அரசுப் பள்ளி மாணவர்கள்... நெகிழ வைத்த ஆசிரியருக்கு குவியும் பாராட்டுகள்.

விமானத்தில் பறந்த அரசுப் பள்ளி மாணவர்கள்... நெகிழ வைத்த ஆசிரியருக்கு குவியும் பாராட்டுகள்.
Published on

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களை விமானத்தில் பயணிக்க வைத்த தலைமை ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

விருதுநகர் மாவட்டம் மங்கலம் கிராமத்தில் இயங்கி வருகிறது அரசுத் தொடக்கப் பள்ளி ஒன்று. இங்கு படிக்கும் மாணவர்களை விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வரவைக்க தலைமையாசிரியர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வரும் மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்வதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி மாணவர்களும் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்துள்ளனர். விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வந்த 5-ம் வகுப்பு மாணவர்கள் 20 பேரையும், 4 ஆசிரியர்களையும் தனது சொந்தச் செலவில் சென்னைக்குச் சுற்றுலா அழைத்துச் சென்று, சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு அழைத்து வந்துள்ளார். இரண்டு நாட்கள் சென்னையை சுற்றி பார்த்த அவர்கள் மகிழ்ந்துள்ளனர்.

இதேபோன்று, மற்ற வகுப்பு மாணவர்களும் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வந்தால் அவர்களையும் ஒரு நாள் சுற்றுலா அழைத்துச் சென்று வரவும் திட்டமிட்டுள்ளதாக தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். ஆசிரியரின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com