\
விருதுநகர்: சமுதாய வளைகாப்பு விழா - சீதனங்கள் வழங்கி வாழ்த்திய அமைச்சர்

விருதுநகர்: சமுதாய வளைகாப்பு விழா - சீதனங்கள் வழங்கி வாழ்த்திய அமைச்சர்

விருதுநகர்: சமுதாய வளைகாப்பு விழா - சீதனங்கள் வழங்கி வாழ்த்திய அமைச்சர்
Published on

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் கலந்து கொண்ட வருவாய்த்துறை அமைச்சர், கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீதனங்களை வழங்கினார்.

சாத்தூர் எஸ்ஆர்.நாயுடு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில், சாத்தூர் நகர, ஒன்றிய பகுதிகளில் உள்ள கர்ப்பினி தாய்மார்களுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் விருதுநகர் மாவட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனம் வழங்கினார்.

இதில், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ராஜம், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், மாவட்ட வருவாய் அலுவலர் மங்கல ராமசுப்பிரமணியன், சாத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் நிர்மலா, கடற்கரைராஜ், மற்றும் கட்சி நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com