\
பஸ்சில் பயணம் செய்த ஆட்சியர்

பஸ்சில் பயணம் செய்த ஆட்சியர்

பஸ்சில் பயணம் செய்த ஆட்சியர்
Published on: 

எரிவாயுவை மிச்சப்படுத்துதல், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், மக்களோடு ‌மக்களாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பேருந்தில் பயணம் செய்தார். 

பாப்பணம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாமிற்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியர் சிவஞானம் மற்றும் அரசு அதிகாரிகள் எளிய முறையில் பேருந்தில் பயணம் செய்தனர். இதுகுறித்து ஆட்சியரிடம் கேட்டபோது மக்களோடு மக்களாக எளிய முறையில் பயணம் செய்யும் போது மக்களின் குறைகளை அறிந்து கொள்ள முடிவதாக தெரிவித்தார். மேலும் எரிவாயுவை மிச்சப்படுத்துவது குறித்தும், சுற்றுசூழல் மாசுபாட்டை குறைப்பது குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இது வழிவகுப்பதாகவும் தெரிவித்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com