\
விருதுநகர்: புதிய தொழில் தொடங்கிய முன்னாள் துணை ராணுவ வீரருக்கு ஏற்பட்ட விபரீதம்

விருதுநகர்: புதிய தொழில் தொடங்கிய முன்னாள் துணை ராணுவ வீரருக்கு ஏற்பட்ட விபரீதம்

விருதுநகர்: புதிய தொழில் தொடங்கிய முன்னாள் துணை ராணுவ வீரருக்கு ஏற்பட்ட விபரீதம்
Published on

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஏர் டேங்க் வெடித்து முன்னாள் துணை ராணுவ வீரர் உயிரிழந்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேலக்கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (50). முன்னாள் துணை ராணுவப்படை வீரரான இவர், பஞ்சர் கடை வைப்பதற்காக அதே ஊரில் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். அதற்காக ஏர் டேங்கில் கம்ப்ரஷர் மோட்டார் மூலம் ஏர் நிரப்பிக் கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராதவிதமாக ஏர் டேங்க் வெடித்துச் சிதறியது.


இதில், முகத்தில் காயம் ஏற்பட்ட கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வத்திராயிருப்பு காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com