தமிழ்நாடு
விருதுநகர்: உதவித்தொகை கேட்டு 30 ஆண்டுகளாக போராடும் மாற்றுத்திறனாளி பெண்
விருதுநகர்: உதவித்தொகை கேட்டு 30 ஆண்டுகளாக போராடும் மாற்றுத்திறனாளி பெண்
விருதுநகர் மாவட்டம் நார்த்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் அரசு உதவித்தொகை கேட்டு 30 ஆண்டுகளாக போராடி வருகிறார்.
ஏழு வயதில் ஏற்பட்ட காய்ச்சலில் கைகள் இரண்டும் செயலிழந்த கற்பக செல்விக்கு தற்போது வயது 39. தந்தையும் உயிரிழந்துவிட தாய் மட்டும் அவரை பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பராமரித்து வருகிறார். அவருக்கும் வயதாகிவிட்ட நிலையில், எந்த வருமானமும் இன்றி எப்படி வாழ்வது என தெரியாமல் கற்பகசெல்வி கவலையடைந்துள்ளார். தன் நிலையை உணர்ந்து அரசு விரைந்து உதவித்தொகை கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.