\
விருதுநகர்: மின்னல் தாக்கி 4 நான்கு கட்டிடத் தொழிலாளர்கள் உயிரிழப்பு

விருதுநகர்: மின்னல் தாக்கி 4 நான்கு கட்டிடத் தொழிலாளர்கள் உயிரிழப்பு

விருதுநகர்: மின்னல் தாக்கி 4 நான்கு கட்டிடத் தொழிலாளர்கள் உயிரிழப்பு
Published on

விருதுநகரில் மின்னல் தாக்கி கட்டிட தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கருப்பசாமி நகரில் சதீஷ்குமார் என்பவருக்கு சொந்தமான புதிய வீடு கட்டும் பணியில் 10க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் ஈடுபட்டனர், பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்த நிலையில் திடீரென மின்னல் தாக்கியதில் கட்டட பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஜக்கம்மாள் என்ற பெண் தொழிலாளி மற்றும் ஜெய சூரியா, முருகன், கார்த்திக் ராஜா ஆகிய கட்டிட தொழிலாளர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே மின்னல் தாக்கி உயிரிழந்தனர். இருவர் படுகாயம் அடைந்தனர்.

சம்பவம் அறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் 4 பேரின் உடல்களை மீட்டு விருதுநகர் மருத்துவ கல்லூரிக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த 4 பேறும் ரோசல்பட்டியை சேர்ந்தவர்கள் என்பதும் உயிரிழந்த முருகனும் கார்த்திக் ராஜாவும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து ஊரக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சம்பவம் குறித்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். 4 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் காயம் அடைந்துள்ளனர். கட்டிட பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சங்கிலி, மகேந்திரன் ஆகிய இருவர் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டிடத் தொழிலாளர்கள் 4 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com