\
ஆசிரியை மீது மாணவர் கத்தியால் தாக்குதல் - விருதாச்சலத்தில் பரபரப்பு சம்பவம்

ஆசிரியை மீது மாணவர் கத்தியால் தாக்குதல் - விருதாச்சலத்தில் பரபரப்பு சம்பவம்

ஆசிரியை மீது மாணவர் கத்தியால் தாக்குதல் - விருதாச்சலத்தில் பரபரப்பு சம்பவம்
Published on

ஆசிரியை ஒருவரை மாணவர் கத்தியால் தாக்கியதில் விருதாசலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆங்கில ஆசிரியராக பணிபுரிகிறார் 42 வயதாகும் ரேகா. இவர், திருவள்ளுவர் நகர் 1வது தெருவுக்கு மதிய உணவு சாப்பிட்டு விட்டு வீட்டில் இருந்து வெளியே வரும் போது 18 வயது மதிக்கத்தக்க மாணவன் கையில் வைத்திருந்த கத்தியால் ஆசிரியரை தலையில் தாக்கினார். இதில் காயமடைந்த அவர், தற்போது விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கத்தியால் வெட்டும் போது கீழே குனிந்ததால் பெரிய அளவு எந்த உயிர் சேதம் இன்றி லேசான காயத்துடன் உயிர் தப்பிய ரேகா, “வெட்டிய மாணவன் அடையாளம் தெரியவில்லை” என்று கூறினார். இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com