\
கார்த்திகை தீபத்தையொட்டி அகல்விளக்கு உற்பத்தி தீவிரம்

கார்த்திகை தீபத்தையொட்டி அகல்விளக்கு உற்பத்தி தீவிரம்

கார்த்திகை தீபத்தையொட்டி அகல்விளக்கு உற்பத்தி தீவிரம்
Published on

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல்விளக்கு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம், பீங்கான் தொழிற்பேட்டை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளிகள், சிறுதொழிலாகவும் குடிசை தொழிலாகவும் அகல்விளக்கு உற்பத்தி செய்து வருகின்றனர்.

இங்கு அகல்விளக்கு, தாமரை அகல்விளக்கு, துளசி மாட விளக்கு, நட்சத்திர விளக்கு, தேங்காய் விளக்கு உள்ளிட்ட 85 விதங்களில் 35 காசுகள் முதல் 35 ரூபாய் வரையில் விளக்குகள் செய்யப்படுகின்றன. மூலப்பொருள் பற்றாக்கு‌றையாலும், மழையாலும் ‌உற்பத்தி தொய்வடைந்தாலும் விற்பனை நன்றாக இருப்பதாக ‌உற்பத்தியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com