சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வைரஸ் காய்ச்சலுக்கு நான்கு வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
கருப்பணம்பட்டி ஊஞ்சக்காடு பகுதியைச் சேர்ந்த அம்சராஜ், அம்பிகா தம்பதியின் மகள் ஸ்ரீவர்சினிக்கு நேற்று காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. தனியார் மருத்துவமனையில் ஸ்ரீவர்சினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், காய்ச்சல் குறையாததால் ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயர் சிகிச்சை அளிக்க சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுதிக்கப்பட்ட ஸ்ரீவர்சினி ஒரு மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கருப்பணம்பட்டி பகுதியில் காய்ச்சல் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே மேலும் இது போன்ற இறப்புகள் நிகழாமல் இருக்க சுகாதாரப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.