\
மாணவி தற்கொலை: பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் தீ வைப்பு

மாணவி தற்கொலை: பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் தீ வைப்பு

மாணவி தற்கொலை: பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் தீ வைப்பு
Published on

சென்னை சோழிங்கநல்லூர் அருகே தனியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டதை அடுத்து மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கியிருந்த ஆந்திர‌ மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ராகமோனிகா தற்கொலை செய்துகொண்டார். மாணவியின் தற்கொலைக்கு கல்லூரி நிர்வாகம்தான் காரணம் என குற்றம்சாட்டி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது பல்கலைக்கழக வளாகத்தில் தீயிட்டும், மின்விளக்குகள், பேருந்துகள், நூலக கண்ணாடிகளை உள்ளிட்டவற்றை மாணவர்கள் அடித்து நொறுக்கினர்.

மாணவர்கள் ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதனிடையே, பாதுகாப்பு நடவடிக்கையாக பல்கலைக்கழகத்திற்கு ஜனவரி 3 ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com