\
விநாயகருக்கு பிரம்மாண்ட கொழுக்கட்டை படையல்

விநாயகருக்கு பிரம்மாண்ட கொழுக்கட்டை படையல்

விநாயகருக்கு பிரம்மாண்ட கொழுக்கட்டை படையல்
Published on

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி உச்சிபிள்ளையாருக்கு 150 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை படைக்கப்பட்டது. 

விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சியில் மலைக்கோட்டையில் உள்ள உச்சிபிள்ளையார் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மலைக்கோட்டை உச்சிபிள்ளையாருக்கு 75 கிலோ எடையில் கொழுக்கட்டையும், மாணிக்க விநாயகருக்கு 75 கிலோ எடையுள்ள கொழுக்கட்டையும் படைக்கப்பட்டன. 

அதற்காக நேற்று காலை முதலே மடப்பள்ளி பணியாளர்கள் கொழுக்கட்டை தயாரிக்கும் பணியில் ஈடுபட தொ‌டங்கினர். மேலும், பக்தர்கள் ஒரு லட்சம் தோப்புக்கரணம் போடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்து 257 விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com