விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், பண்டிகைக்கான சிலைகளை தயாரிக்கும் பணிகள் முனைப்போடு நடைபெற்று வருகின்றன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சியில் கொண்டையம்பேட்டை மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில், விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. திருச்சி,பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சாவூர், நாமக்கல் போன்ற பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய விரும்புவர்கள் முன்பதிவு செய்ததன் அடிப்படையில்.அரையடி உயரம் முதல் 12 அடிவரை உயரம் வரையிலான சிலைகளை தயாரித்துவருகின்றனர். இந்த ஆண்டும் புதுமையான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புதுமையான வடிவங்களில் ட்ராகனை வைத்திருப்பது போன்ற விநாயகர்சிலைகள் உருவாக்கப்படுகின்றன. மண், காகிதக்கூழ் கொண்டு உருவாக்கப்படும் அந்த சிலைகள் அழகிய வண்ணங்களில் உருப்பெறுகின்றன. மேலும் மண்ணை பதப்படுத்தி, திரித்து, அச்சில் இட்டு வார்த்து காயவைத்து, வர்ணம் தீட்டி சிலைகள் உருவாக்கப்படுகின்றன.
வயல் மற்றும் வாழைத்தோட்டங்களில் கிடைக்கும் களிமண்ணால் மட்டுமே சிலைகளை செய்ய முடியும் எனக் கூறும் இவர்கள் சிலை தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் கிடைப்பதில் சிரமங்களை சந்திப்பதாக கூறுகிறார்கள். மண்ணை தெய்வமாக பாவித்து, அம்மண்ணைக் கொண்டே கடவுள் உருவங்களைச் செய்யும் இந்த கலைஞர்கள், தங்களுக்குவாழ்வாதாரம் அளிக்கும் இந்த காலத்தை பயன்படுத்தி சிலைகளை உருவாக்கும் பணிகளில் மூம்முரம்மாக தீவிரம் காட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.