விநாயகர் சதுர்த்தியன்று இரு தரப்பினரிடையே மோதல் - அதிகாரிகள் ஆய்வு

விநாயகர் சதுர்த்தியன்று இரு தரப்பினரிடையே மோதல் - அதிகாரிகள் ஆய்வு

விநாயகர் சதுர்த்தியன்று இரு தரப்பினரிடையே மோதல் - அதிகாரிகள் ஆய்வு
Published on

கல்பாக்கம் அருகே நல்லூர் கிராமத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குனர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த நல்லூர் கிராமத்தில் கடந்த 24 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு தாழ்த்தப்பட்டோர் வாழும் பகுதியில் சிலை வைத்து வணங்கி வந்துள்ளனர். அப்போது சிலர் அப்பகுதியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக பலமுறை சென்றுள்ளனர். இதை வழிபாடு நடத்திவந்த இளைஞர்கள் தட்டிகேட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் பெருகியுள்ளது. இதைகண்ட அப்பகுதி பெரியோர்கள் அவர்களிடம் சமாதனம் பேசியுள்ளனர். இதை பொருட்படுத்தாத ஒருதரப்பினர் நள்ளிரவில் ஆயுதங்களுடன் காலனி பகுதிக்குள் வந்து வீடுகளுக்கு தீ வைத்துள்ளனர்.

மேலும் வீடுகளுக்குள் புகுந்து வீட்டிலுள்ள பொருட்களை சூறையாடியுள்ளனர். மேலும் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 10 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தகவல் அறிந்து சதுரங்கபட்டினம் போலீசார் அங்கு விரைந்து வருவதை அறிந்த கலவரக்காரர்கள் தப்பிசென்றனர். பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் 13 பேரை போலீசார் கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தனர்.

காயமுற்றவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர்கள் அனுமதித்தனர். இந்நிலையில் இன்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குனர் மதியழகன் மற்றும் உதவி இயக்குனர் இனியன் திருக்கழுகுன்றம் வட்டாட்சியர் சாந்தி மற்றும் அதிகாரிகள் மாமல்லபுரம் டிஎஸ்பி எட்வர்ட் ஆகியோர் நேரில் சென்று கலவரம் ஏற்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மக்கள் நடந்தவற்றை அதிகாரிகளிடம் தெரிவித்தனர், இதனைத்தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com