விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதிகளில் பல வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. அதற்காக, ராதாபுரம், வள்ளியூர், திசையன்விளை உள்ளிட்ட பகுதிகளில் களி மண்ணால் ஆன விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பாகுபலி, உழவன், கிரிக்கெட் வீரர் என டிரண்டுக்கு ஏற்றார் போல் பல வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுவதாக சிலை வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சிலைகளைச் செய்ய காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து 10 கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பகுதிகளில் சுமார் 600 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.