விநாயகர் சதுர்த்தி - திருமுறை பாடலைக் குறிப்பிட்டு முதல்வர் வாழ்த்து

விநாயகர் சதுர்த்தி - திருமுறை பாடலைக் குறிப்பிட்டு முதல்வர் வாழ்த்து

விநாயகர் சதுர்த்தி - திருமுறை பாடலைக் குறிப்பிட்டு முதல்வர் வாழ்த்து
Published on

நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட இருக்கும் நிலையில் தமிழக மக்களுக்கு முதல்வர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பதினொறாம் திருமுறை பாடலில் உள்ள பாடலை குறிப்பிட்டு, மக்கள் தங்கள் இல்லங்களில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து, அருகபுல், எருக்கம் பூ உள்ளிட்ட பல பூக்களுடன், பழங்கள், கரும்பு, அவல் போன்றவற்றை வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி மகிழ்வார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விநாயகரின் திருவருளால் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகி, நலமும் வளமும் பெற்று மகிழ்வுடன் வாழ்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com