தமிழ்நாடு
மண்டியிட்டு கும்புடுறேன் படிப்பா: இப்படியும் ஒரு தலைமை ஆசிரியர்!
மண்டியிட்டு கும்புடுறேன் படிப்பா: இப்படியும் ஒரு தலைமை ஆசிரியர்!
விழுப்புரம் காமராஜ் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவர்களிடம் பழகும் விதம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தில் உள்ள காமராஜர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக உள்ளவர் பாலு. இவர் மாணவர்களிடம் அன்பாகவும், எளிமையாகவும் பழகி வருகிறார்.
மாணவர்கள் யாரேனும் படிக்கமால் இருந்தால் அவர்களிடம் இவர் படிக்கச்சொல்லும் விதமே, மாணவரை படிக்க வைத்து விடுகிறது. இவர் மாணவர்களிடம் மண்டியிட்டு, கையெடுத்து கும்பிட்டு படிக்கும் படி கூறுகிறார்.
இதனாலேயே இவரது பள்ளியில் அனைத்து மாணவர்களுக்கும் படிக்கும் எண்ணம் ஏற்பட்டு விடுவதாக மாணவர்களின் பெற்றோர் கூறுகின்றனர். அத்துடன் ஒழுக்கத்தை கற்பிக்கும் விதத்திலும் மாணவர்களின் அன்பையும், மரியாதைதையும் பெருவாரியாக பெற்றுள்ளார் இவர்.

