விழுப்புரம்: அரசுப் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்களை வணங்கி மகிழ்ந்த முன்னாள் மாணவர்கள்

அரசுப் பள்ளியில் கடந்த 38 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியரின் பாதத்தை தொட்டு வணங்கி கண்ணீர் மல்க நன்றிக் கடன் செலுத்தினர்.
Teachers
Teacherspt desk

தமிழ்நாடு - புதுச்சேரி மாநில எல்லையான திருக்கனூர் அடுத்த விழுப்புரம் மாவட்டம் சித்தலம்பட்டில் பச்சை பசேல் என்று இயற்கை சூழலுடன் அமைந்திருக்கும் இந்த அரசுப் பள்ளியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் இன்று வரை பயின்று பயனடைந்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் படித்த மாணவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர்களாகவும், அரசுத் துறை அதிகாரிகளாகவும், தனியார் நிறுவன அதிகாரிகளாகவும், பெரிய தொழில் அதிபர்களாகவும் வளர்ந்து இருக்கிறார்கள்.

இந்த சித்தலம்பட்டு அரசு பள்ளியில் கடந்த 1985 மற்றும் 86 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் ஸ்கூல் பிரண்ட்ஸ் குரூப் சித்தலம்பட்டு என்ற வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கி ஒன்றிணைத்தனர். இந்த முன்னாள் மாணவர்கள் தான் படித்த பள்ளிக்கு நாம் ஏதாவது உதவி செய்ய வேண்டும். தமக்கு பாடம் சொல்லிக் கொடுத்து தம்மை வாழ்க்கையில் முன்னேற்றிய ஆசிரியர்களுக்கு நன்றி கடன் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு முன்னாள் மாணவர்களின் சங்கமம் நிகழ்ச்சி சித்தலம்பட்டு அரசு பள்ளியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் 1985 மட்டும் 86 ஆம் ஆடு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் தங்கள் குடும்பத்துடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 38 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாக சந்தித்த சுமார் 55 வயது வரை உள்ள முன்னாள் மாணவர்கள 60-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி குருபூர்ணிமா நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த சந்திப்பின் மூலம் ஒவ்வொருவரும் பழைய நண்பர்கள் குடும்பத்துடன் மீண்டும் இணைந்து மனதில் இருக்கும் சந்தோஷசத்தைப் பகிர்ந்து கொண்டனர். மேலும் ஒருவருக்கொருவர் செல்பி எடுத்துக் கொண்டு குரூப்பாக நின்று போட்டோவும் எடுத்து மகிழ்ந்தனர்.

இதைத் தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளையும் வழங்கி கௌரவித்தனர். 85 மற்றும் 86 ஆம் ஆண்டு பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்களை வரிசையாக நிற்க வைத்து அவர்களின் காலில் விழுந்து வணங்கி தங்களது நன்றிக்கடனை கண்ணீர் மல்க மகிழ்ச்சியுடன் செலுத்தினார்கள். பதிலுக்கு ஆசிரியர்களும் எல்லா வளமும் பெற்று வாழ்க வாழ்க பல நூறு ஆண்டு என்ற பாடலை பாடி அவர்களை மலர் தூவி வாழ்த்தினார்கள். இந்த நிகழ்வு பார்ப்பவர்களை நெகிழ வைத்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com