\
“மாணவியை எரித்துக்கொன்றவர்களை தூக்கிலிட வேண்டும்” - விஜயகாந்த்

“மாணவியை எரித்துக்கொன்றவர்களை தூக்கிலிட வேண்டும்” - விஜயகாந்த்

“மாணவியை எரித்துக்கொன்றவர்களை தூக்கிலிட வேண்டும்” - விஜயகாந்த்
Published on

விழுப்புரத்தில் மாணவியை எரித்துக்கொன்றவர்களை தூக்கிலிட வேண்டும் என விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தின் சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ என்பவர் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள விஜயகாந்த், “முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி மாணவி ஜெயஸ்ரீ யை எரித்துக் கொன்றவர்களுக்கு உச்சபட்ச தண்டனையான தூக்கு தண்டனை வழங்க வேண்டும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com