விழுப்புரம் மாணவி கொலை விவகாரம் : அதிமுகவிலிருந்து இருவர் நீக்கம்

விழுப்புரம் மாணவி கொலை விவகாரம் : அதிமுகவிலிருந்து இருவர் நீக்கம்
விழுப்புரம் மாணவி கொலை விவகாரம் : அதிமுகவிலிருந்து இருவர் நீக்கம்

விழுப்புரத்தில் மாணவி எரித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய முருகன், கலியபெருமாள் இருவரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தின் சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ என்பவர் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய இருவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் சிறுமதுரை புதுக்காலனி கிளைக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்து கலியபெருமாள் என்பவர் நீக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் சிறுமதுரை காலனி கிளைக் கழக மேலமைப்புப் பிரதிநிதி பொறுப்பில் இருந்து கே.முருகன் நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த அறிவிப்பை அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளனர். மேலும் கட்சியின் கன்னியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் இருவரும் நடந்துகொண்டதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com