தமிழ்நாடு
குழந்தை கடத்த வந்ததாக வடமாநில இளைஞர்கள் சிறைப்பிடிப்பு
குழந்தை கடத்த வந்ததாக வடமாநில இளைஞர்கள் சிறைப்பிடிப்பு
விழுப்புரத்தில் வடமாநில இளைஞர்களை குழந்தைகள் கடத்த வந்ததாகக் கூறி கிராமமக்கள் தாக்கியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மாத்தூர் கிராமத்தில் வடமாநில இளைஞர்கள் ஐந்துபேரைக் குழந்தைகள் கடத்த வந்ததாகக் கூறி கிராமமக்கள் அவர்களை தாக்கி சிறைப்பிடித்தனர். தகவல் அறிந்த கச்சிராயப்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சிறைபிடிக்கப்பட்ட இளைஞர்களை மீட்டனர். பின்னர் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று முதலுதவி சிகிச்சை அளித்து விசாரணை மேற்கொண்டனர்.சங்கராபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான போர்வேல் கம்பெனியில் வேலை பார்த்து வருவதாகவும், சம்பளம் கேட்டதற்கு முதலாளி தங்களை மிரட்டி, தவறான தகவல்களை கிராம மக்களிடம் பரப்பியதாக தெரிவித்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.