தமிழ்நாடு
விழுப்புரம்: இரண்டு மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரிக்கு மீண்டும் தொடங்கிய பேருந்து சேவை
விழுப்புரம்: இரண்டு மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரிக்கு மீண்டும் தொடங்கிய பேருந்து சேவை
இரண்டு மாதங்களுக்குப் பிறகு விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி மாநிலத்திற்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளன.
புதுச்சேரிக்கு இன்று முதல் பேருந்து செல்லும் என்கிற அறிவிப்பு பெரிய அளவு தெரியாத நிலையால், குறைந்த அளவே பயணிகள் பயணித்து வருகிறார்கள். நாளை முதல் வழக்கம்போல பயணிகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு என்கிறார்கள் போக்குவரத்து தொழிலாளர்கள்.