accused
accusedpt desk

விழுப்புரம்: திமுக தலைவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக நிர்வாகி கைது

விழுப்புரம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர்களை அவதூறாக பேசியதாக பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
Published on

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தக்காளி மற்றும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

accused
accusedpt desk

இந்நிலையில், விக்கிரவாண்டி பகுதியில் நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று பாஜக தெற்கு மாவட்ட தலைவர் கவிவரதன் ஆர்ப்பாட்டத்தில் பேசினார். அப்போது திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோரை தரக்குறைவான வகையில் ஆபாசமாக பேசியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து திமுக தலைவர்களை ஒருமையில் பேசிய பாஜக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் என விக்கிரவாண்டி பேரூராட்சி திமுக செயலாளர் சித்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து புகாரின் அடிப்படையில் கலிவரதன் மீது விக்கிரவாண்டி காவல் துறையினர் அவதூறு வழக்குப் பதிவு செய்து இன்று அதிகாலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com