\
அரசுப் பள்ளியில் மாணவர்களை விரட்டி விரட்டி துடைப்பத்தால் அடித்த சக மாணவர் 

அரசுப் பள்ளியில் மாணவர்களை விரட்டி விரட்டி துடைப்பத்தால் அடித்த சக மாணவர் 

அரசுப் பள்ளியில் மாணவர்களை விரட்டி விரட்டி துடைப்பத்தால் அடித்த சக மாணவர் 
Published on

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களை துடைப்பத்தால் அடித்த சக மாணவர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள வேப்பேரி அரசு மேல்நிலைப் பள்ளியின் வகுப்பறையில் மாணவர் ஒருவரை சக மாணவர் துடைப்பம் கொண்டு தாக்கும் காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதோடு, வகுப்பறையில் இருந்த மின்விசிறி, ஸ்விச் போர்டு ஆகியவற்றையும் மாணவர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும் கல்வித் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இதுவரைi எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com