விழுப்புரம்: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழா

விழுப்புரம்: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழா
விழுப்புரம்: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழா

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோயில் பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலமாகும். இத்திருத்தலத்தில் வருடம்தோறும் மாசி திருவிழா நடைபெறுவது வழக்கம் மாசித் திருவிழாவின் இரண்டாவது நாளான இன்று மயான கொள்ளை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இத்திருவிழாவில் சிவனுக்கு பிடித்திருந்த பித்தை இத்தளத்தில் எழுந்தருளியிருக்கும் அங்காளம்மன் நீக்கியதாக வரலாறு. இதனால் அங்காளம்மன் வேடமிட்ட பக்தர்கள் ஆக்ரோஷமான நடனமாடி வாயில் உயிருள்ள கோழிகளை கடித்தும் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் பயிரிடப்பட்டு விளைவித்த தானியங்களையும் நாணயங்களையும் கொழுக்கட்டை காய்கறிகள் பழ வகைகள் உள்ளிட்டவைகளை மயானத்தில் படைத்து பின்பு பக்தர்கள் மீது வாரி இறைப்பர்.

இந்த பொருட்களை தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்ற நோக்கில் பக்தர்கள் ஏராளமானோர் கொள்ளையிடப்பட்ட பொருட்களை ஆர்வமுடன் எடுத்துச் சென்றனர். மேலும் பக்தர்கள் அம்மன் வேடமணிந்து ஆக்ரோஷமாக நடனமாடி மயானத்துக்கு வந்து வேண்டுதலை நிறைவேற்றினர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com