\
விழுப்புரம்: ரஜினியின் அரசியல் முடிவு ஏமாற்றம் - அதிர்ச்சியில் ரசிகர் மரணம்

விழுப்புரம்: ரஜினியின் அரசியல் முடிவு ஏமாற்றம் - அதிர்ச்சியில் ரசிகர் மரணம்

விழுப்புரம்: ரஜினியின் அரசியல் முடிவு ஏமாற்றம் - அதிர்ச்சியில் ரசிகர் மரணம்
Published on

விழுப்புரம் அருகே ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பான முடிவால் ஏமாற்றமடைந்த ரஜினி ரசிகர் அதிர்ச்சியில் உயிரிழந்தார். சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு செய்துவிட்டு பின்பு அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே பாணம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் தீவிர ரஜினி ரசிகர், இவர் ரஜினி அரசியல் கட்சி துவங்கப் போவதில்லை என்கிற அறிவிப்பு வெளியானதிலிருந்து சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல காணப்பட்டார். அதன் பின்னர் நேற்று இவர் சமூக வலைத்தளத்தில் ரஜினியின் முடிவைக் கேட்டு தனது இறுதி கருத்து என பதிவிட்டு விட்டு அதிர்ச்சியில் இறந்து விட்டார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அவரது குடும்பத்தினர் இதுபற்றி கூறுகையில் ரஜினி மீது பெரிய அளவில் பற்றும் பாசமும் கொண்ட, அவரது தீவிர ரசிகராக இருந்து வந்தவர் ராஜ்குமார், ரஜினி அரசியல் கட்சி துவங்குவதில்லை என  கேட்டதில் இருந்து சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்த அவர் நேற்று சமூக வலைத்தளத்தில் தனது கருத்தை பதிவிட்டு விட்டு இறந்து விட்டார்” என தெரிவித்தனர்.

இது தங்களுக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் கூறினார்கள். உயிரிழந்த ராஜ்குமாருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com