காலதாமதமாக வந்த ஆம்புலன்ஸ் - அடித்து நொறுக்கிய கிராம மக்கள்

காலதாமதமாக வந்த ஆம்புலன்ஸ் - அடித்து நொறுக்கிய கிராம மக்கள்

காலதாமதமாக வந்த ஆம்புலன்ஸ் - அடித்து நொறுக்கிய கிராம மக்கள்
Published on

பொன்னேரி அருகே சாலை விபத்தில் காயமடைந்தவரை ஏற்றி செல்ல காலதாமதமாக வந்த ஆம்புலன்ஸை அடித்து நொறுக்கிய கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் காட்டவூர் கிராமத்தை சேர்ந்தவர் பார்வதி. உடல் நலம் சரியில்லாத இவர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு பின்னர் உறவினர் விஜயகுமார் என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது பின்னால் வந்த பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பார்வதி அதே இடத்தில் உயிரிழந்தார். காயமடைந்த விஜயகுமாரை ஏற்றிச் செல்ல ஆம்புலன்ஸ் தாமதமாக வந்தது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ஆம்புலன்ஸை அடித்து நொறுக்கினர். பின்னர், அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com