நெல்லை: “இடுகாட்டை காணவில்லை” - சினிமா பாணியில் காவல் நிலையத்தில் புகாரளித்த கிராம மக்கள்...

நெல்லை அருகே இடுகாட்டை காணவில்லை என சினிமா பட பாணியில் கூடன்குளம் காவல்நிலையத்தில் பட்டியலின மக்கள் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Police investigation
Police investigationpt desk

செய்தியாளர்: ராஜூ கிருஷ்ணா

நெல்லை மாவட்டம் கூடன்குளம் அருகே சிவசுப்பிரமணியபுரம் கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு உயிரிழப்போரின் உடலை அருகிலுள்ள குளத்தின் கரையில் உள்ள இடுகாட்டில் கடந்த 50 வருடத்திற்கும் மேலாக அக்கிராம மக்கள் புதைத்து வருகின்றனர்.

police investigation
police investigationpt desk

இந்நிலையில், நேற்று முருகேசன் என்பவர் ஜேசிபி இயந்திரம் மூலம் இடுகாட்டில் இருந்த கல்லறைகளை இடித்து தரைமட்டமாக்கி இடுகாடு இருந்த இடம் தெரியாமல் பாதை அமைத்துள்ளார். இதைக் கண்டித்து ஊர் பொதுமக்கள், கூடன்குளம் காவல் நிலையத்தில் இடுகாட்டை காணவில்லை என்றும் முருகேசன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரளித்தனர்.

Police investigation
கோவை | "மது வாங்கித் தருகிறேன், வாங்க" - டாஸ்மாக் வாசலில் இருந்தவரை அழைத்து நரபலி கொடுத்த விவசாயி???

புகாரை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடன்குளம் போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com