தஞ்சை: இறந்தவர்களின் சடலத்தை ஆற்றுக்குள் இறங்கி தூக்கிச் செல்லும் அவலம்
செய்தியாளர்: ந.காதர்உசேன்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா ஒத்தநாடு மேலயூர் யாதவர் தெருவில் சுமார் நூறு குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் பாப்பான் ஓடை ஆற்றுக் கால்வாயை கடந்துதான் சுடுகாட்டுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில், அந்த பகுதியை சேர்ந்த குருசாமி (60) என்பவர் நேற்று உயிரிழந்தார். அவரது உடலை உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஆற்றில் இறங்கி இடுப்பளவு தண்ணீரில் சிரமத்துடன் சுடுகாட்டுக்கு தூக்கிச் சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மழைக் காலங்களில் பாப்பன் ஆற்றில் தண்ணீர் செல்வதால் இறந்தவர்கள் உடலை சுடுகாட்டுக்கு கொண்டு செல்வதில் தொடர்ந்து சிரமம் இருந்து வருவதாகவும் இதனால் ஆற்றில் குறுக்கே பாலம் கட்டித் தர வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

