\
சிறுத்தை நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சம் - வளர்ப்பு நாயை வேட்டையாடியதால் பீதி

சிறுத்தை நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சம் - வளர்ப்பு நாயை வேட்டையாடியதால் பீதி

சிறுத்தை நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சம் - வளர்ப்பு நாயை வேட்டையாடியதால் பீதி
Published on

பொள்ளாச்சி அருகே சுற்றித்திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறைக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆழியார் அணையை ஒட்டிய புளியங்கண்டி கிராமத்தைச் சேர்ந்த ராசு என்பவரது தோட்டத்துக்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று, வளர்ப்பு நாயை வேட்டையாடியுள்ளது. இதுபற்றி ஆய்வு செய்த வனத்துறையினர் கால் தடங்களைக் கொண்டு சிறுத்தையின் நடமாட்டத்தை உறுதி செய்தனர். அதன் நடமாட்டத்தைக் கண்காணிக்க அந்த இடத்தில் 4 கேமராக்களை வனத்துறையினர் பொருத்தியுள்ளனர். ஆனால் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com