உயிரிழந்த கருடனின் உடலை சம்பிரதாய முறைப்படி தகனம் செய்த கிராம மக்கள்

இறந்து கிடந்த கருடனின் உடலை சம்பிரதாய முறைப்படி தகனம் செய்து அதன் அஸ்தியை பவானியாற்றில் கரைத்த கிராம மக்கள். இதன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிராம மக்கள்
கிராம மக்கள்pt desk

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை திம்மராயம்பாளையம் என்னும் கிராமத்தில் வெண்நிற கழுத்துப் பகுதி கொண்ட கருடன் ஒன்று இறந்து கிடப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இந்நிலையில், கடவுள் நாராயணனின் வாகனமாக கருதி கருடனை வழிபட்டு வரும் இப்பகுதி கிராம மக்கள், இறந்து கிடந்த கருடனின் உடலை இறந்தவர்களின் சடலத்தை தகனம் செய்வதுபோல் சம்பிரதாய முறைப்படி இறுதி சடங்குகளை செய்து அடக்கம் செய்ய முடிவெடுத்தனர்.

கிராம மக்கள்
கிராம மக்கள்pt desk

இதன்படி அதன் உடலை, மலர்களால் ஆன பாடையில் வைத்து, அதனை நான்கு பேர் ஊர்வலமாக சுமந்து சென்றனர். பின்னர் அங்கிருந்த மயானத்தில் முறைப்படி கருடனின் உடலை எரித்ததோடு அதன் சாம்பலை மேட்டுப்பாளையம் பவானியாற்றில் கரைத்தனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com