ஐய்யோ புலியா.. தெறிச்சு ஓடும் குரங்குகள் - கிராம மக்களின் கெத்தான முயற்சி!

ஐய்யோ புலியா.. தெறிச்சு ஓடும் குரங்குகள் - கிராம மக்களின் கெத்தான முயற்சி!

ஐய்யோ புலியா.. தெறிச்சு ஓடும் குரங்குகள் - கிராம மக்களின் கெத்தான முயற்சி!

பொள்ளாச்சி அருகே கடைகள், வீடுகளுக்குள் புகுந்து குறும்பு செய்யும் குரங்குகளை புலி பொம்மைகளை வைத்து நவமலை கிராம மக்கள் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி அருகே நவமலை பகுதியில் மலை அடிவார கிராம மக்கள், மலைப்பகுதிகளுக்குள் வசிக்கும் மக்களின் வீடுகள், கடைகள் ஆகியவற்றில் புகுந்து குரங்குகள் அட்டகாசம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு சிலர் அதை இடையூராக நினைப்பதில்லை என்றாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடியிறுப்பு பகுதிகளுக்குள் புகும் குரங்களை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

புகார் வரும் பகுதிகளில், வனத்துறையினரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வேறு பகுதிகளுக்கு இடம் மாற்றிவருகின்றனர். ஆனால் சில நாட்கள் மட்டுமே வனப்பகுதிகளுக்குள் இருக்கும் குரங்குகள் மீண்டும் குடியிருப்புகளுக்குள் வந்துவிடுவதாக கூறப்படுகிறது.  இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்காமல் பொதுமக்களும், வனத்துறையினரும் அவதியில் இருந்துவருகின்றனர். 

இந்நிலையில், குரங்குள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் இருக்க, கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த நவமலை வனக்கிராமத்தில் பொதுமக்கள் புதிய யுக்தியை கையாண்டு வெற்றிபெற்றுள்ளனர். அவர்கள் வசிக்கும் வீடு மற்றும் கடைகளின் முன் பகுதியில் புலி பொம்மையை வைத்து குரங்குகளை கட்டுப்படுத்தி வருகின்றனர். இந்த பொம்மையை பார்த்து குரங்குகள் அந்த பகுதிக்கு பயந்து வருவதில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com