‘தண்ணீர் எடுக்க மறுப்பு’ - பொதுக் கிணறை மீட்டுத் தரக்கோரி  போராட்டம்

‘தண்ணீர் எடுக்க மறுப்பு’ - பொதுக் கிணறை மீட்டுத் தரக்கோரி போராட்டம்

‘தண்ணீர் எடுக்க மறுப்பு’ - பொதுக் கிணறை மீட்டுத் தரக்கோரி போராட்டம்
Published on

நாமக்கல் அருகே பொது கிணற்றை மீட்டுத் தரக்கோரி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

நாமக்கல் மாவட்டம் பொம்மைகுட்டைமேடு அடுத்துள்ளது பொட்டணம்புதூர். அப்பகுதியில் அருந்ததியர் மக்கள் பயன்படுத்தி வந்த ஒரு பொது கிணற்றை கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் மாற்று சமூகதினர் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் சிலர் அந்த கிணற்றை ஆக்கிரமித்து வேலி போட்டுள்ளதாகவும் இதனால் பட்டியலின மக்கள் தண்ணீர் எடுக்க மறுப்பு தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பண்டிகை காலத்தில் கோவிலுக்கு கும்பம் அழைத்தல் நிகழ்ச்சிக்கும் அனுமதி மறுப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அக்கிராம மக்கள் கடந்த 7 ஆண்டுகளாக பண்டிகை நடத்தாமலும் உள்ளனர். இதுகுறித்து நாமக்கல் கோட்டாட்சியரிடம் 5 முறை இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடைபெற்றும் எந்த விதமான உடன்பாடு ஏற்பவில்லை.

இந்நிலையில், அக்கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் நாமக்கல் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்னர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com