கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சி பகுதியில் புதிதாக அமையவிருக்கும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பொதுமக்கள் மது அருந்துவது போல் நடித்தும், அவர்களை பெண்கள் அடிப்பது போன்றும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திக்குறிச்சி கிராமத்தில் மதுக்கடை அமைக்க முயற்சி செய்யும் தகவலை அறிந்த அப்பகுதி கிராம மக்கள் சில தினங்களுக்கு முன்பு ஒன்று திரண்டு கடை அமையவிருக்கும் பகுதிக்கு செல்லும் சாலையை துண்டித்து போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.